சனி, செப்டம்பர் 10, 2011

உயிர் வலி தெரிந்த்ததுண்டா



என் மௌனம் சொல்லாத
காதலையா
வார்த்தைகள்
சொல்லிவிடப்போகின்றன ,,,,?

கண்ணீரோடு எழுதிய வரிகள்


புகைக்கவும் மது ருசிக்கவும்,
சூதில் லயிக்கவும் செய்தேன் இதுவரை,
இனி மாட்டேன்.......... என
முதலிரவு மோகத்தில் பிதற்றுகிராயே,,,,,,

காலம் முழுமைக்கும் எனை
காயப்படுத்தாது இருப்பாயா,,,,,,?
கடந்த காலத்தே எனக்கும் ஒரு
காதல் இருந்ததென்று சொன்னால்,,,,,,,,,

வெள்ளி, செப்டம்பர் 09, 2011

மறக்க
முயலும் போதுதான்
உயிர்ப்பிக்கின்றன
உன் நினைவுகள்...

புதைக்க நினக்கும் போதுதான்
கீறித்துளிர்க்கின்றன
உந்தன் ஞாபகங்கள்...

அழிக்க
எண்ணும் போதுதான்
கண்முன் தெரிகின்றன
உந்தன் பிம்பங்கள்...

என்ன செய்ய
உன்னை நினைத்து விட்ட
குற்றத்திற்காக நான்
செத்து விடவா முடியும்?

இன்றுவரை கூட
மறந்து விடத் தோன்றவில்லை
நேற்றின் பிரதிபலிப்பால்
மனசின் வேதனை எளிதில் ஆறாது...

முகம் மறக்கும் முன்பே
முகவரியை தொலைத்து நிற்கிறது
என் வாழ்க்கை...

நீர்ச்சுழலில் சிக்கிய சருகாய்
நிறைவேறாத ஆசைகளின் அலையிலே
சுழலுகின்ற மனசு
மீண்டும் வருமென்ற நம்பிக்கை
சிறிதும் எனக்கில்லை....

வாழவேண்டும் என்ற
நிர்ப்பந்தத்தால்
எத்தனை வேதனைகளைத்தான்
விருதுகளாய் பெறுவது
காலம் கேள்வி கேட்க
பதில் சொல்ல மறுக்கிறது மனது...

இனியவளே!
புரட்டியது புத்தகத்தை
என்றாலும் அதில்
புதைந்திருப்பது
உன் புகைப்படம்...

வாழ்க்கையின்
முதல் படியேறி
வழுக்கி விழுந்தவன் நான்
எனக்கு வழிகாட்டியாய்
வந்தவள் நீ...

காவிய பெண்ணே
நடந்து பார்க்கலாம்
வாழ்க்கையை நோக்கி
நமக்கு
வழி தெரியும் வரை...

வாழ்க்கை பாதையில்
நான் பயணித்த போது
வழுக்கி விழுந்தது
பள்ளம் அல்ல
அது உன் உள்ளம்...

வெள்ளி, செப்டம்பர் 02, 2011

உனக்காகத் தானே என் வாழ்வு எல்லாமுமே

உனக்காக காத்திருந்து காத்திருந்த
என் காலங்களை மட்டும் தான் நீ
களவு கொள்ளலாம் ,,,,,,,,,,

கரைவது என்னவோ உன்னோடு
சேர்ந்துவிட்ட என் எதிர் காலங்களும் தான் ,,,

நீ மட்டும் என் வாழ்வில் வந்திருக்காவிட்டால்
எனது பாதைகள் தடம் மாறி போய்இருக்கும்

கால்களுக்கு தடம் போட்டவளே
நினைவிருக்கிறதா,,,,,,,,,,,,?

காய்த்திருக்கும் கனிச்சோலை என்றல்லவா
காலமெல்லாம் காத்திருந்தேன்

கனிகள் தந்ததென்னவோ நிஜம் தான்
கடைசியில் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பட்டுவிட்ட சோலை என்றா
பனியாய் கூட படர மறந்தாய்

நிஜம் தானே
எப்படி பனியாய் ,,,,,,,,,,,,,
சூரியனின் கதிர்களினால் சுட்டொளிந்து போவாயே,,,
வற்றாத கங்கை என வரவிருக்கிராயோ ,,,,

வசந்தங்கள் பாடி உன்னை வரவேற்றுக் காத்திருப்பேன்
வரும் நாளை எண்ணி எண்ணி
வாசல் தோறும் பூ விரிப்பேன்

பூக்களுக்கேனும் ஒரு முத்தம்மிடு
உன் புன்சிரிப்பை பார்த்தேனும் எனைப்பார்த்து அவை சிரிக்க ,,,,,,,,,