ஞாயிறு, செப்டம்பர் 13, 2015

சங்கத்தமிழ் 

தண்ணுமை பறை அடிச்சாச்சு
 சிறு பட்சி கூட்டமே .....

நீவீர் இட்ட முட்டைகளை வேறிடம் சேர்ப்பீர் ....

விசைக்கருவி அல்ல
இந்த வில்லும் அம்பும்
இப்போது இது இசைக்கருவி ....

யாழ் மீட்டும் பாணன் பாரீர்
பெரும் பறை கேட்க போறீர்
சிறு பட்சி கூட்டமே .....

உம்மை விடைகொள்ள சொல்லியும்
வரும் மாதர் கருதறுக்க வினை கொள்ளச்சொல்லியும் ....
சிறு பட்சி கூட்டமே

எங்கள்  கால்கள்
 நாளை காலை உங்கள் இருப்பிடத்தை அழிக்கப்போகிறது
நீங்கள் வேறிடம் செல்வீர்

சிறு பட்சி கூட்டமே .......

------இசை கொண்டு வாழ்ந்த இனம் நாங்கள்

ஈ    எறும்பு   சிறு குருவி
 இதுவும் எங்கள் சொந்தம் என்றோம் -----

கடைசி வரை சொல்லலையே
ஏன் உலக நாடே ?

நம் காதவழி தூரம் தான்
 என்தமிழ் நாடே ?

பதுங்கத்தான் பதுங்குகுழி .....
இதிலும் பகுத்தறிவா ?

வியாழன், ஆகஸ்ட் 13, 2015

கிடைத்தாய் நீ எனக்கு
தொலைத்தவன் கடவுள்....

இன்று????


நானும் கடவுளாய்

திங்கள், பிப்ரவரி 17, 2014

என் பாசத்திற்க்குரிய தேசத்து உறவுகளே ,,,,,,
வணக்கம் ...................
சிந்தியுங்கள் 
பின்.. முடிந்தால் சுய சிந்தனை கொள்ளுங்கள் 

நாம் இப்போது எங்கே நிற்கிறோம் 
நம் சம கால சூழல் என்ன?
வாழும் வேலுமா நம் கையில் 

நீங்கள் முட்டாள்களாகவே இருக்க வேண்டும் என்பதற்காகவே மட்டும் தான் உங்களுக்காகவே புனையப்பட்ட இதிகாசங்கள் ,,

இன்னும் பின் செல்வதா ?
பின் என்ன செய்ய ?

படி தமிழ் படி
தமிழ்ப்படி உன் படி

தமிழா ... கேள்மின்

நீ ஆகாதவன் தமிழ் நாட்டில்

ஈழத்திலும் இன்று அப்படித்தான் ,,,,,,,,
பிறகெதற்கு உனக்கு ஓட்டு

போடடா நோட்டா வில் ஒரு ஆட்டு

வெள்ளி, ஜனவரி 31, 2014

கோடையில் மழை 
ஒரு நாள் மகிழ்ச்சி 

மாரியில் ஒரு வெயில் அதுவும் அதுவே 

தாகத்தில் ஒரு துளி அது தான் அமிர்தம்
அமிர்தம் என்பது ஒரு துளி தானா ?

தூரிகை தீட்டிடும் ஒரு வரி போதும்
தீ யா நீ ?

அது தான் நீ யா ?

நீந்திடும் தூரத்தில் உன் கரையும் ஓன்று

நீவி விடும் என் விரல்கள் துய்க்குமா இனியும் என்னில் ,,,,,?