செவ்வாய், நவம்பர் 22, 2011

நீ மட்டும் தெரிந்திருக்க ........

உனக்கே தெரியாமல் 
நான் உன்னை காதலித்தது 
பின் நாளில் தான் உனக்கே 
தெரியும் 

எப்படிச் சொல்வேன் 
மற்றவர்க்கு இப்போது 

பைத்தியக்காரன்  என்றல்லவா 
பரிகாசம் செய்கிறார்கள் 

இப்போது தான் திருப்தி எனக்கு 

ஒரு வேளை
நான் உன்னை 
காதலித்தது 
உனக்கு தெரியாமலேயே போயிருந்தால்

திங்கள், நவம்பர் 21, 2011

மை கொண்டு வருவாளா

கல்லூரி செல்லும் கால்ச்சட்டைப்பருவத்தில் 
காதலைத் தேட கவிதை எழுதத்தொடங்கினேன் 
கவிதை கை கூடியும் காதல் கை கூடாததால் 
கவிதையை காதலிக்கத்தொடன்கினேன்

கவிதையாக எனை ஒருத்தி காதல் என்று சொன்னாள்
இறக்கைகள் இல்லாமல் வானத்தில் பறந்தேன் 
கடைசியாகத் தான் தெரிந்தது ....அவள் காதலித்தது 
என் கவிதைகளைத்தான் என்று 

இருந்தும் 
காத்திருக்கிறேன் என் கவிதைக்காக 

மை கொண்டு வருவாளா கண்களுக்கு தீட்டு என்று _இல்லை 
கை விரித்துப் போவாளா நீயும் ஒரு தீட்டு என்று 

மாற்றம் தரும் மதங்கள் வரட்டும்

விதி வழி தான் எல்லாமுமெனில் 
புது விதி செய்வோம் 

வலிகள் தரும் விதிகளைஎல்லாம் 
சிலைகள் கொண்டேனும் அழிப்போம்

மானிடம் வாழத்தான் வந்ததிந்த நிலை என்றால் 
மாற்று வழி கண்டு அந்த சதிகளை தகர்ப்போம் 

தகர்ந்ததந்த தடைகள் என்றால்
தகித்தலில்லை தணலுமில்லை
கணங்குகள் மட்டுமென்ன 
கங்கணம் கட்டிக்கொண்டு 

மனிதம் வாழா வரங்கள் எதற்கு 
மாற்றம் தரும் மதங்கள் வரட்டும்     

ஆதாம் என்றும் ஏவாள் என்றும் 
ஆருடம் கூறும் மனிதா நில்லு 

வணக்கத்திற்கு உரியது 
அல்பாவும் அமீபாவும் 

உனக்கும் எனக்கும் முதல் வித்து 
அங்கே தான் ஆரம்பம் 

என் கவிதை

என்னை எழுதிய முதல் கவிதை 

வெள்ளி, நவம்பர் 18, 2011

மோட்சம்

நிலவுருகும் பொழுதொன்றில் 
உன்னிடம் வருவேன் அடைக்கலமாய் ...

அந்தத் தனியறையில் 
மொழித்தேவையில்லா உரையாடலில் 
ஈரம் துளிர்க்கும் விழி வழி
உயிர் பெயரும் நம் உணர்வுகள் 

காலக்கிரமத்தில் 
ஏமாற்றங்களில் தோய்ந்த நம் கை ரேகைகள் 
கலந்துரையாடும் 

நீளும் நிசப்த்தத்தில்  
மனக்குகையின் ஆழ்ந்தத இருட்டுக்குள்ளிருந்த்து
திடீரென முளைக்கும் 
வெளிச்சக்கைகள் 
நம்மைக் கட்டி அணைக்கும் 

புயலுக்குப் பின் 
அமைதியாய் புறப்படும் 
பெருமூச்சொன்றில் 
தூக்கி எறியப்படலாம் 
நம் தீரா வேட்கைகள் 

முகம் மூடிய
 உன் சேலைத் தலைப்பின் வழி 
தெரியும் 
உன் மலர்ந்த முகத்தின் சிரிப்பில் 
எனக்குக் கிடைக்கலாம் 
வாழ்வின் மோட்சம் .....!
  

நினைவுகள்

தோல்வி , அவமானம் ,புறக்கணிப்பு ...........
எல்லாமும் ஒரு சேர துரத்துகையில் ........

ரயில் தண்டவாளம் ............................................
முகில் முட்டும் பெருமலையின் ..................
தரை தொடாத ஒரு விதானம் .........................
அன்றி 
நஞ்சுப்புட்டியையோ
நாடுதல் நல்லது ...................................................

செல்லப்பிராணிகளை........................................
பரிசுப்பொருட்களை.............................................
பிரியமான முத்தத்தை ........................................
எதிர்பார்த்த குரலோசையை ............................
விழி வழியும் கண்ணீரை ...................................
ஒரு நிமிட தாமத்தை ...........................................

முற்றிலுமாய் புறக்கணித்துவிட வேண்டும் 

தேக்கிவைத்த நினைவுகளை அவைகள் 
கலைத்துவிடக்கூடும் ............................................

புதன், நவம்பர் 16, 2011

இதுவும் ஒரு இரங்கல் உரை



எதைச் சொல்லி என்ன ,,,,,,,,,,,
எத்தனை சொல்லி என்ன ,,,,,,

வலிகள் தந்தது நானா நீயா ......?
பரஸ்பரமாய் பகிர்ந்துகொண்டோம் 

அன்று ,,,,,,,,
மந்தகாச வேளையிலே .............................
காதல் தந்த போதையிலே........................ 
கூடல் இல்லா இரு உடல்கள் 
ஊடலிலே தவித்ததுவும் ..........................
ஊர் அடங்க்கிப் போன பின்னும் 
தெரு நாயின் வெறி ஓலம் 
தொல்லை தந்த வேளையிலும் ............

கொலுசு இல்லா கால்களிலும் 
கேட்டதென்ன விரச கானம் ...................
எல்லைகள் இருந்ததில்லை எமக்கிடையில் 
உன் குரலோசை  எனக்கு மட்டும் 
உயிரோடு இருக்குமட்டும் .........................

உடல் மட்டும் என்னோடு 
உள் மனது உன்னோடு ...................................

இருவருமே பகிர்ந்து கொண்டோம் 
அத்வைதம் அடையக் கண்டோம் ..............

ஊர் உலகில் யாருமில்லை 
எம்மைப்போல் காதல் கொள்ள 
ஒரு கர்வம் இருவருக்கும் 
இருவருமே சிறகடித்தோம்
வானத்தின் எல்லை வரை .............................

சிறகொடிக்க யார் நினைத்தார் ,,,,,,,,,,,,,,,


ஒரு சிறகை இழந்த்திருந்தால் 
மறு சிறகில் உன்னை சுமப்பேன் 
இரு சிறக்கும் அறுத்து விட்டார் 
என் மேலே பயணம் செய் 
தரையை காணும் வேளையிலே 
என்னை விட்டு பறந்து விடு .........

சில நொடிகளேனும் உன்னை சுமந்த 
சுகாபனுவன்களோடு போய்விடுவேன் .........

இன்று ,,,,,,,,,,

குற்றுயிராய்க் கதறுகிறேன் 
என்னவளே எங்கே நீ......?
மருத்துவங்கள் எனக்கு வேண்டாம் ...
மாற்றங்களும் இனி வேண்டாம் ...
உன் நினைவில் உயிர் போகும் 
ஒரு சுகமே இனி போதும் ...
என் குரலை கேட்பதற்கு 
ஏங்கி அன்று நின்றவளே ....
உன் மடியில் தலை சாய 
இடமொன்று தருவாயா .............?

நிரந்தரமாக அல்ல ..........
இப்பிறப்பின் நித்திரைக்காய் ....

செவ்வாய், நவம்பர் 15, 2011

பெண்ணும் புயலும் ஒன்றாமே 


வருவது வசந்தமாய் எனினும் ,,,,,,,,,,,,,,
வலிகள் ,,,,,,,,,
தந்த வடுக்கள் ,,,,,,,,
வார்த்தைகள் இல்லை 
வர்ணிப்பதற்கு ,,,,,,,,

கண்டவன் காட்சிப்படுத்துகிறான் ,,,,
கொண்டவன் சாட்சிப்ப்டடுத்துகிறான் ,,,,,,,,
பட்டவன் பாடாய்ப் படுகிறான் ,,,,,,,,,
மற்றவன் உங்களைப்போல் கேள்வி கேட்கிறான் ,,,, 

இறுதியாக ஓன்று
ஒப்பிடாதீர்கள் ,,,,,,
பெண்ணையும் புயலையும் ,,,

பெண் 
தென்றலாய் வந்து புயல் ஆகிறவள் 

புயல்
பிறப்பிலேயே புயலாக சுகிக்கிறது

காட்சி மாற்றம் பெண்ணில் தான் ,,, 
புயலில் இல்லை

கட்சி மாற்றமும் அங்கே தான் புயலில் இல்லை 
மீண்டும் தென்றலாய் மாறலாம் பெரும் புயல் ,,,,

கடைசி வரை காயங்களை மட்டுமே,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பெண்ணையும் புயலையும் ஒப்பிடாதீர்கள் 
பாவம் 
புயல் கூட புலம்பத்தொடன்கிவிடும் ,,,,,,,,,,,

வியாழன், நவம்பர் 10, 2011

எது நாத்திகம்


நாத்திகன் என்று எனை அழைத்தார்
எனைத்தெரிந்த்த எல்லோரும்

மூடர்களா நீங்கள் ............?

எத்தனை மதங்கள் உங்களை சுற்றி

மற்றவன் மதத்தை மதித்ததுண்டா..................?
அன்றி மனதளவிலேனும் ரசித்ததுண்டா .....?

உங்கள் கடவுள்கள் மேல் எனக்கு வருத்தமில்லை
எல்லாமும் உங்கள் மீது தான்

ஒரு மதத்தவனுக்கு மற்றவனை பிடிக்காது
அவனுக்கோ வேறோடுவனப்பிடிக்காது
இன்னொருத்தனுக்கும் அப்படியே தான்
எனக்கு மதந்க் கொண்ட மனிதனைப் பிடிக்காது

இப்போது சொல்லுங்கள்
நானா நீங்களா ?

புதன், நவம்பர் 09, 2011

படைத்தவனுக்கே ஒரு மடல்


பூக்கின்ற பூவெல்லாம் அவள் போல
பூக்கக் கேட்டேன் .......................................

பூமியிலே அவள் அழகை பூக்கள் எல்லாம்
பார்க்கக் கேட்டேன் ...................................

சூரியனை, சந்திரனை சுற்றி வரும்
பூக்கள் உண்டாம் ........................................

நீவீர் இனி வேண்டாம் நின்மதியாய்
ஓய்வெடுங்கள்.............................................

நாமிருவர் மட்டுமிங்கே சுகிக்கவேண்டும்
இவ்வுலகை ..................................................

மாற்றிடுக மற்றவற்றை மனிதரோடு சேர்த்து
மண்ணுலகு நமக்குமட்டும் ...................
மரிக்கின்ற வரைக்கும் .............................

நிறுத்திவிடு உன் படைப்பை பிரம்மா
மறந்தா விட்டாய்
தேவலோக தேவதயை பூமியிலும் படைத்துவிட்டாய்

தேவதையா அவள் ....................................
மூவுலகின் பேரழகி...................................

ஒரு சந்தேகம் எனக்கு பிரம்மா ...!
விஷ்வாமிதிரனால் நீ பட்ட தவிப்பை எல்லாம்
எனைக்கொண்டு துடைக்க எண்ணமா...............?