வியாழன், டிசம்பர் 13, 2012

ஊமையாய் அழுகிறது!


நான் மரண வாசலில் நிற்கும் நேரம்!
இறுதியாக என் நினைவுகள் திரையில் அவளுடன் வாழந்த வாழ்க்கையெலாம் ஒடிக் கொண்டிருக்கிறது!

அவளை முதன் முதலில் பார்த்த என் மடிக்கணனி எனக்காக மௌன அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது!

அவளுடன் நான் பேசிய முதல் வார்த்தை என்ன
ிடம் ஊமையாய் அழுகிறது!

அவளுக்காக நான் எழுதிய கவிதை புத்தகம் என் நினைவுகளின் கண்ணீரில் அழிந்துக் கொண்டிருக்கிறது!

உன் விழிகளில் நான் வாழ்ந்த நாட்கள் எல்லாம்!
என் இரவை இழந்த நாட்கள்!
இனி உன் விழியில் வாழவும் வழி(லி) இல்லை! இனி இரவை இழக்கப் போவதும் இல்லை!

நான் போகும் சேதி அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! இருப்பினும் என் விழிகள் என் வீட்டு வாசலை நோக்கி!

வந்தாளா இல்லை வருவாளா? என்பது தெரியாமலே  போகிறது என் உயிர்!

என் புறப்பாடு ஆரம்பமானது!
போகும் வழியெலாம் என் விழிகளின் பரிதவிப்பு!

என் ஆன்மா தேடித் தேடி அலைந்த்தது  தான் மிச்சம்!

கல்லறையில் புதைந்தேன்!
அய்யோ இங்கேயும் அவளின் நினைவுகளா?

உன் நினைவுகளை அழிக்கத் தானடி நான் இங்கே விதைந்தேன் ஆனால் இங்கேயும்  உன் நினைவுகள்  என் கல்லறையை நிரப்பி விடுகிறது

அடுத்த ஜென்மத்தில் உன் இதயமாக பிறந்து விடுகிறேன்!
ஒன்றாய் சேர்ந்து வாழ்வோம்,,,, இறப்போம்!

வயதான பின்பும் முதல் காதல் என்றும் இளமையாகத்  தான் இருக்கும்!

கண்ணீர் கவிதை

பல ருடங்கள் கழித்து நண்பர்கள் ஒன்று கூடும் நாள்!
அனைவரும் சந்தோஷத்தில் திளைக்க ஒர் இதயத்தின் கண்ணீர் கவிதை இது!

வாழ்க்கை  முடியும் முன்பு கண்டிப்பாக வருவேன் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டாள்!

மீண்டும் அவளைப் பார்க்கும் தருனம் இன்று தான் தூ
ரத்தில் அவள்!,

பார்த்த கணத்தில் என் கண்கள் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது!
அன்று அவளைப் பார்க்க நான் தவித்த தவிப்புகள் இன்றும் என் கண்களில்!

அன்றை விட இன்று இன்னும் அழகாகத் தான் இருக்கிறாள் விழிகளில் அதே விழி ஈர்ப்பு விசையோடு!

அவளும் நானும் உரையாடிய skype இப்போதும்  காத்துக் கொண்டிருக்கிறது எங்களுக்காக "ஏ சீக்கிரம் வாடி" என்று மீண்டும் கூற ஆசை தான் எனக்கும்!

நான் அவளை அழைத்துச் செல்ல சொன்ன இடங்கள் எல்லாம் மீண்டும் கேட்கிறது எப்பொழுது  வருவீர்கள் என்று?!
நான் என்ன பதில் சொல்வேனடி!

எனக்காக நீ எழுதிய கடிதங்கள்  எல்லாம் இன்றும் பத்திரமாகத் தான் இருக்கிறது!
அதை காதல் முறிவுக்கான ஒப்பந்தம் என்று எடுத்துக் கொள்ளவா?
பதில் சொல்லடி!

அன்று தவறாக வரைந்த வரிகளை   அழித்தாய்!
என் நினைவுகளில் உன்னை அழிக்க வழிச் சொல்லடி?!
என் காதலியே!

அவள் நெருங்க நெருங்க உதிரம் உறைகிறது !
என் செல்கள் சிதிலமடைகிறது!

வேண்டாமடி பெண்ணே உன் கனவனை அழைத்துக் கொண்டு இங்கிருந்து சென்று விடு!
என் கண்ணீர் சொல்லி விடப் போகிறது நான் உன் மீது கொண்ட காதலினய்!

நீ திருமணமானாலும் என் காதலியே!

ஞாயிறு, டிசம்பர் 02, 2012

தனதடி திரு ஒறு

குல சாமிகளைக் கொன்று விட்டோம் 
கருங்கற்களை  தொழ  துணிந்தோம் ,,,,

வேலும் வாழும் காட்சிப்பொருளாய் 
வெற்றுடல் சுமந்தோம் ஈனப்பிறப்பாய் ,,,

எழுகதிருடன் எழு எமை எதிர்ப்பவன் விழ 
தனதடி திரு ஒறு கரும்புலி என எழு ,,,,

வியாழன், நவம்பர் 29, 2012

FOR THE PEOPLE

அண்மையில் ஒரு செய்தி பார்த்திருப்பீர்கள் 
1950 இல் அமெரிக்கா சந்திரனை ஒரு அணு குண்டு மூலம் 
அளித்துவிட திட்டமிட இருந்தது என்று .....

இந்த செய்தி முட்டாள் தனமானது 

இந்த செய்தி நாசா விற்கு தெரிந்தால் ,,,,,,,,,
நடை முறை சாத்தியம் இல்லாத ஏதோ ஒன்றை
எப்படி இவர்களால் சிந்திக்க முடிகிறது ?

ஒரு அணு குண்டு அதுவும் சிறியதாம் .......

முதலில் அணு குண்டின் செயற்பாட்டினை தெரிந்து கொள்ள வேண்டும்

கதிர் வீச்சு

இப்போது ஒரு செய்தி
ஜப்பான் மீது இரண்டு குண்டுகள் போடப்படனவே

ஆசியா கண்டமே சிதறிப்போனதா ?

ஜப்பான் இன்னும் மிகப்பெரிய பொருளாதார நாடு தானே ?

அமெரிக்க ஒன்றும் முட்டாள் இல்லையே

ஒரு கருத்துக்கு சந்திரனை அளித்து விட்டால் ..........

நாம் வாழ்கின்ற பூமி எப்படி ஒழுங்கு முறையில் சுற்றும்

கடல் கள் எப்படி இருக்கும்

கடலில் அலை உருவாகுவது கூட சந்திரனால் தானே
இது எல்லாம் 1950 இற்கு முன்பே கண்டு பிடித்தது தானே .........

இன்று நிபுறு அனர்த்தம் வந்தால் கூட இஸ்ரேல் வைத்திருக்கும் மொத்த
அணு குண்டும் (2000) வெடித்தாலும் மதிய ரேகையில் இருக்கும் ..... சில நாடுகளே அழியும்

இவ்வாறிருக்க
சிறிய அணு குண்டை வைத்து எப்படி நிலவை அளிக்க முடியும்

இன்னொரு செய்தி திரவ கைட்ரஜை ண் கொண்டு தாக்க திட்ட மாம் முட்டாள்களே

வாயு மண்டலமே இல்லாத ஒரு இடத்தில் என்ன நிகழ்வு நடந்தாலும்
எதிர் வினை இல்லையே

புரளியைக் கிளப்புகிறவர்கள்
சற்று சிந்தித்துப் பாருங்கள்

நீல் அர்ம்சற்றாங் நட்ட கொடி இன்னும் அப்படியே தானே இருக்கிறது

நிறைய எழுத விருபம்
ஓன்று நீங்கள் வாசிக்க மாட்டீர்கள்

இன்னொன்று அறிவு ஞானம் வேண்டும்

புதன், நவம்பர் 07, 2012

யார் இவன் /இவள்

நேற்று என்னோடு கூட இருந்தவனா 
மௌன மொழி பேசி நாணிச் சிரித்தவளா 
கால நதி ஓட்டத்திலே காணாமல் போனவனா 

தன் பிள்ளைக்கு பால் கேட்டு கிடைக்காமல் துடித்தவளோ
துணைவி போன பின் எதற்கு வாழ்க்கை என்று நினைத்தவனோ

தள்ளாத வயதினிலே தாய் மண்ணில் புதைந்தவரோ

தலைவனின் அணியிலே எமைக்காத்த சோதரரோ

காணவில்லை என்று இன்னும் தாய் தேடும் மகன் இவனோ

யார் இவர் ?

சம்பிரதாய சடங்கு கூட செய்யாமல் போனவரே
சத்தியமாய் சொல்லுகிறோம்
வலிகள் தந்தவனுக்கே வலிகள் தருவோம் ,,,,,,,
சந்ததிகள் கடந்தாலும்
சதி வலைகள் தொடர்ந்தாலும் ,,,,,,

திங்கள், ஆகஸ்ட் 06, 2012

இன்னும் எத்தணை பேர்

நொறுங்கி போனேன் ஒரு நாள் 
 என்னை விட்டு போனதற்காக அல்ல 
இன்னும் எத்தணை  பேர் இருக்கிறார்களோ 
என்னை போல 
பல தேசங்களில் பரதேசிகளாய் 

சனி, மார்ச் 03, 2012

கடிதம் எழுது

எழுது எழுது 
எனக்கு ஒரு கடிதம் எழுது 

என்னை நேசிக்கின்றாய் என்று அல்ல 
வேறு யாரையும் நேசிக்கவில்லை என்று 

கனவுகளிலும் உன்னோடு வாழ்பவன் என்ற 
உரிமையில் தான் இந்த வரிகள் 

ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

என்ன செய்ய

மனிதாபிமானம் மரணித்த ஒரு நாள் 
ஒரு தாய் 
ஒரு ஆண் பிள்ளை ஒரு பெண் பிள்ளை 
பையனின் உடம்பில் ஓட்டுத்துனியும் இல்லை 
நள்ளிரவு 12 கடந்துவிட்டது 

எனது கடைக்குள்ளே அடைக்கலமாய் 

என்ன செய்ய 

வாடிக்கையாளர்களை சீக்கிரமாய் வெளியேற்றிவிட்டு 
கதவை அடைதுக்கொள்கிறேன் 
ஒருவருக்கும் வார்த்தை இல்லை 

என்னுடைய சட்டையை பையனுக்கு கழற்றி கொடுக்கிறேன் 

தாய்ப்பாசம்  

அவன் தாய்க்கு 

தன் ஆடை தருகிறாள் தாய் அவனுக்கு 

எதுவும் கேட்கவில்லை  எவரிடமும் 

தொலைபேசி தருகிறேன் அவர்களிடம் 

நீண்ட உரையாடல் 

விடை பெறும் நேரம் இருவருக்கும் கண்ணீர் 
பையன் கும்பிட்டு விடை சொன்னான்  

நண்பனின் வாகனத்தில் அனுப்பி வைத்தேன் 

சிறிது நேரம் சென்று ஒரு அழைப்பு 
பிரிதொருவரிடம் இருந்து 
எங்கட வீட்ட 
வந்து விட்டார்கள் 

கணவன் மனைவியை ............... 
புரிந்து கொள்ளுங்கள் 

ஒட்டு மொத என் உறவே 

நீங்கள் தாலி என்ற ஒன்றை 
கட்டிவிட்டதால் 

மனைவியும் பிள்ளைகளும் உங்கள் அடிமைகள் இல்லை 

அப்போதும் கூட அந்த இளம் தாய் கேட்கிறாள் 
தயவுசெய்து polise  இற்கு போன் செய்ய வேண்டாம் எண்டு 

என் இனமே 
உங்கள் குடிக்கும் போதைப் பழக்கத்திற்கும் 
பெண்கள் என்ன பகடை சோழியா? 


பின்பு கேள்விப்பட்டேன் 
நான்கே மாதங்கள் தானாம் 
பிரான்ஸ் வந்து .....

நடு வீதியில் அநாதரவாக நின்றவர்களை ....
பிரெஞ்சு கொஞ்சம் கூட தெரியாதவர்களை ...
பக்கத்தில ஒரு தமிழ் கட இருக்கு எண்டு 

சைகை மூலம் யாரோ சொல்லி 
இங்கே வந்தார்களாம் 

14 வருடங்கள் கணவனை பிரிந்து  
கனவுகள் சுமந்து 
வெளிநாடு என்று சொல்லி .....

என்ன வாழ்க்கை இது 

ஒன்று சொல்கிறேன் 
உறவுகளே 

இங்கே 

அனேகமாக 
மனிதம் செத்து
நாளாகிவிட்டது 

எனது சொந்த கருத்தை இப்போது பதிவு செய்ய விரும்புகிறேன் 

எம்மில் அநேகர் 
குடிக்கும் போதைப்பளக்கத்திட்கும் அடிமைகளாகி 
இழந்தது பணத்தை மட்டும் அல்ல 

ஆண்மையும் தான் 

எங்கே தன்னால் இயலவில்லையே என்று 
மனைவி இன்னொருவனுடன் போய்விடுவாளோ என்று  
கற்பனைகளுக்கு ஒரு உருவம் கொடுத்து 
காடு மிராண்டி ஆகிறான் 

நிறைய மருத்துவங்கள் வந்தாகிவிட்டது 
மனிதனாக வாழ எண்ணம் கொண்டால் 
மருத்துவ மனை செல்லுங்கள் 

மதம் கொள்ளாதீர்கள் 

செக்ஸ் என்பது மூடி மறைக்க வேண்டிய ஒன்று அல்ல 
இந்த உலகத்திலே எல்லா உயிர்க்கும் இயற்கைஆனது 

வாழ்க்கையை வாழுங்கள் 

வியாழன், பிப்ரவரி 09, 2012

பொறுத்திரு

உலக நாடுகளே 
ஒரு தரமேனும் திரும்பி பார்ப்பாயா 
பெரும் வலியோடு எழுதும் வரிகள் இவை 
உங்களுக்கு தான் வார்தைகளிலையே 
செவிகளுமில்லையே அன்றெங்கள் ஓலங்கள் கேட்க

உலகில் எந்த நாடெனும் கலவரம் கொண்டால் 
கால் பதிக்க துடிக்கும் U N ஏ 
நாங்கள் கூண்டோடு அழிய 
வேடிக்கை பார்த்தாய் 
கொடியவனுக்கோ கோபுரமானாய்

பொறுத்திரு 

மானுடம் வாழ ஒண்ணா 
மாலை தீவிற்கே 
மாற்று அரசியல் கண்டாயே 

இப்போது சொல்ல்கிறேன் கேள் 

கடாரம் வென்றவனடா என் தாத்தன்

காழ்புணர்ச்சி தானே உனக்கு 
விட்டால் உன்னை விஞ்சிடுவாநென்று   

மாயன் கலண்டரை தூக்கி எறி
மானுடம் வாழ வகுத்தவர் நாமே 

குமரிக்கண்டத்தோடு தொலைந்தது 
ஓலைச்சுவடிகளோடு நம் ஒரு தொகுதி சொந்தமுந்தாம்  

இன்றும் வாழ்கிறார் 
உங்களால் மறுக்கப்படுபவர்களாய் 

ஆஸ்திரேலியா விலே கிழக்கு அமெரிக்கா விலே 

ஈழத்தவனை மட்டும் தான் நீ அளிக்க முடியவில்லை 

அண்டவனடா நாங்கள்
உங்களையும் என்களின்கீழ் அன்றொருநாள்  

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை
 ஆழத்த்துடிப்பதில்  என்ன குறை 
தோண்டிப் புதைத்தவர் மீண்டெழும் நாள் வரும் 
உரத்துச் சொல்லுவோம் உறுதி உரை

வெள்ளி, ஜனவரி 27, 2012

நான் தொலைத்த என் "தீ "

இல்லவே இல்லை..
ஜென்மங்கள் மீதெனக்கு  நம்பிக்கை..
இது நாள் வரை... 

இப்போது ...

மீட்டிப்பார்க்கிறேன்...
வீணையை அல்ல.... நான் தொலைத்த என் "தீ " யை..

எப்படி என்னால் மட்டும்  உடல் வாழ முடிகிறது ...?

இப்போதும் சுயநலவாதி  தான் நான்...
சுமைகளை எல்லாம் உன்மீதே பத்திரப் படுத்துகிறேன் 

என் உடல் சுமந்த வழிகளை எல்லாம் நானே சுமக்கிறேன் 
உன்னோடு கலந்த உயிர்.... அதுவேனும் வாழட்டும்  

இரங்கல் உரை ..

மோகத்தின் முதல் வித்து காதலிலே உருவாச்சு 
கை கூடி வரும் போது தூய்மை என்று பெயராச்சு  

சுற்றம் கூடி முடித்து வைத்தால் சுவர்க்கம் என்று பிதற்றுகிறார் 
சொந்தமாக முடிவெடுத்தால் ஊர் கூடி தூற்றுகிறார் 

இரு மனங்கள் இணைவது தான் திருமணமாம் உளறுகிறார்
 சாதி விட்டு சாதி மனம் இணையக் கண்டால் ஏசுகிறார் 

மனங்கள் ஓன்று  சேர்வதற்கு உடல்கள் ரெண்டு கூட்டணியா?
மலர்களையே சேர்த்து வைக்கும் வண்டுகள் போல் மாற்றணியா?

காதலுக்குள் மறைத்து வைத்த காமம் ஓர் நாள் கேள்வி கேட்கும் 
அது கூட காதல் என்ற போர்வையிலே மறைந்து வாடும் (வாழும்)

முகமூடி என்னினமே ,,,,,,,
இப்போதேனும் விழித்துக்கொள் 

ஜலதரங்கம் பாடுமட்டும் நீ ரசித்தல் அலையின் திரை......
ஆழிப் பேர் அலையாய் வந்தால் யார்க்குமில்லை இரங்கல் உரை ..

சனி, ஜனவரி 14, 2012

நண்பா உனக்கு

norway இல் வாழும் நண்பா 
வணக்கம் 

எதுவென்று தெரியாதா காலத்தே 
காதல் என்று சொன்ன 
எந்தன் காதலியாய் நீ நினைத்த 
ஒருத்தி 
சந்தோசமாய் இருக்க 
எதாவது செய் என்று சொன்னாய் 

நன்றி 

உன்னை என் நண்பன் என்று நினைத்து 
பெருமை கொள்கிறேன் 

எப்படி உனக்கு சொல்வது ...

என்னால் ஒருத்தி 
எல்லாம் இருந்தும் 
இல்லாமல் போனாள் என்று ...

செவ்வாய், ஜனவரி 03, 2012

நலமோடு நீ வாழ்க ..........

அழகான பூ ஓன்று பூமியிலே 
பிறந்தின்று ஆகிறது அகவை ... 

கடவுள்கள் மேல் துளியும் இல்லை நம்பிக்கை 
அவளுக்காக போயிருந்தேன் 
வெறும் கற்சிலையில் கண்டிருந்தேன் 
என் பொற்கொடியின் புன்னகையை 

வார்த்தைகளால் வாழ்த்துகிறேன் 
வாழ்கையிலும் காத்திருக்கேன் 

உன் பெயர் போல சுடர் கொண்டு 
நலமோடு நீ வாழ்க ..........