வெள்ளி, ஆகஸ்ட் 02, 2013

பகுத்தறி

கோயில் இல்லா  ஊர்களென்று 
கூறும் படி ஏதுமில்லை 
வீதிக்கொரு கோயில்   அட 
வீட்டுக்குள்ளும் சாமி 

அதை கை எடுத்துத் தொளுவதட்கோ 
கண் எடுத்துப் பார்ப்பதற்கோ 
ஊருக்குள்ளே யாருமில்லை 
இருப்பவர்க்கோ நேரமில்லை 

உன் பாட்டன் முப்பாட்டன் போயிருந்தான் கோயில் அங்கு 
கோ இருந்தான் தன் குடியின் குறை கேட்டு நிறைவு கண்டான் 

ஆண்டவனின் இருப்பிடந்த்தான் கோயில் 
அதிலேதும் திருத்தமில்லை முரண்பட்ட கருத்துமில்லை 

படைத்தவனை காவல் காக்க பழகிக்கொண்ட உந்தனுக்கு 
பகுத்தறியத்தெரியவில்லை பாவம் உன்னை என்ன சொல்ல 

பகுத்தறி

கோயில் இல்லா  ஊர்களென்று 
கூறும் படி ஏதுமில்லை 
வீதிக்கொரு கோயில்   அட 
வீட்டுக்குள்ளும் சாமி 

அதை கை எடுத்துத் தொளுவதட்கோ 
கண் எடுத்துப் பார்ப்பதற்கோ 
ஊருக்குள்ளே யாருமில்லை 
இருப்பவர்க்கோ நேரமில்லை 

உன் பாட்டன் முப்பாட்டன் போயிருந்தான் கோயில் அங்கு 
கோ இருந்தான் தன் குடியின் குறை கேட்டு நிறைவு கண்டான் 

ஆண்டவனின் இருப்பிடந்த்தான் கோயில் 
அதிலேதும் திருத்தமில்லை முரண்பட்ட கருத்துமில்லை 

படைத்தவனை காவல் காக்க பழகிக்கொண்ட உந்தனுக்கு 
பகுத்தறியத்தெரியவில்லை பாவம் உன்னை என்ன சொல்ல 

செவ்வாய், மே 21, 2013

மெல்லத் தமிழினி வாழும்

மெல்லத் தமிழினி வாழும் 
அந்த மேற்கு மொழிகள் நம் நாவிடை சாகும் 

சிவகங்கை சீமையிலே தெரியுதொரு ஒளிக்கீற்று 
சீமானாய்த்தானிருக்கும் நீயும் எண்ணை ஊற்று 

சாதிமத சாக்கடையை அதனுள்ளே போடு
தமிழ் கொண்டு அணையாமல் சிதை மூட்டு மேலும் மேலும்

கங்கையிலும் கரைத்திடாதே களிவதந்த அஸ்தி தன்னை
மீந்திருக்கும் சாம்ம்பலிலும் திராவிடம் வாழக்கூடும்
அந்த மேற்கு மொழிகள் நம் நாவிடை சாகும்

சனி, ஏப்ரல் 27, 2013

சிந்த்ததுண்டா ?



பட்டுடுத்தி பொட்டுவச்சு 
பஞ்சணையின் மஞ்சமதில
சேர்த்து வச்ச கர்ப்பையெல்லாம் 
முதல் முதலாய் குடுக்கையில 
படுக்கையில ரத்தம் பார்க்கும் 
பகுத்தறிவின் முடிவிலிகாள் ......

சிந்த்ததுண்டா ?

அந்தப் பட்டுப்பூச்சி பட்ட பாடும் 
பாடாப்பட்ட பெண்ணின் பாடும் 

வெள்ளி, ஜனவரி 18, 2013

கொடு முடி ஒறு

இறந்த பிறகு எனதுடலுக்குமொரு பெயருண்டு.........
புகளுடலென்று...

அது இகழா அன்றி மகிழா ?

இயைந்திணைந்து வந்த போதும் 
இதுவரைக்கும் இசைந்ததில்லை 
இதுவெதுவோ அட 
அது இது தான் 

வாழும் போது யார்க்குமில்லை 
போனபின்நெதட்கு.......... கௌரவங்கள் 

பாரதியும் பண்பட்டான் 
பார்ப்பனரால் புண்பட்டான் 
ஆனபோதும் மரிக்கயிலே மானிடத்தில் 
நிலைத்துவிட்டான் 

கலந்துவிட்டோம் 
கவலையின்றி செறிந்துவிட்டோம் 
தனித்துவத்தை தழைக்க சொன்ன 
மனிதங்களை கொன்றே விட்டோம் 

குனிந்து குனிந்தே கூன் விழுந்த என்னினமே 
நீ 
அடிமை கொள்வது 
அடுத்தவனை அல்ல 

உன்னிலும் கீழானவனை 
ஏதோ ஒன்றில் இழந்தவனை 

அடுத்தவன் உன்னை அடக்கி ஆள்கையில் 
அரிதாரங்களில் ஆழுமை இல்லை 

எதிர்த்தவன் எவனெனும் இடுமொழி வேண்டாம் 
கொடு முடி ஒறு உன் இறு திமிர் எடு 

வெள்ளி, ஜனவரி 11, 2013

மண்டியிட தோணும்

ஏதாவதொன்றை எழுத தொடங்கையில்,,, 
எதுகையின்  மோனையின்  கலவியின் வீழ்படிவாய் ,,,

எனை நானே தேடுகின்றேன்  
உன்னில் எனை தொலைத்தபின்னும் 
அது இல்லை என்று ஆனா பின்னும் 

இப்போதும் நம்பிக்கை இல்லை 
வெற்றுச் சிலைகளின் மேல் 

இருந்தும் அந்த மாயக் கண்ணனை ஏதோ மண்டியிட தோணும் 
நீ சொல்லி செல்லாததைஎல்லாம் கீதை  வழி சொன்னதனால் 

இங்கெதுவும் நிரந்தரமில்லை